மாஸ்டர் திரைப்பட நாயகி மாளவிகா மோகனன் வரிசையாக வெளியிட்டு வரும் இன்ஸ்டா புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகின்றன. வார்த்தெடுத்த சிலை போல் இருக்கும் அத்தேகத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள். இந்தப் புகைப்படங்கள் மூலம் தென்னிந்தியாவின் செக்ஸி குயின் மாளவிகா மோகனன்தான் என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
கேரளாவைச் சேர்ந்த பிரபல ஒளிப்பதிவாளர் மோகனனின் மகளான இவர் ஈரானிய திரைப்பட இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய ‘பியாண்ட் தி கிளவுட்ஸ்’ திரைப்படத்தில் நடித்தார். மாடலிங்கில் பிசியாக இருந்த இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நாயகியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். ‘நூறடிப் பளிங்கை ஆறடியாக்கி சிற்பிகள் செதுக்கிய உருவமடி’ என்கிற வைரமுத்து வரிகளுக்கு வடிவம் கொடுத்தைப் போலான உடல்வாகைக் கொண்டிருக்கிறார்.
அழகும் செக்ஸியும் ஒரு சேர அமையப் பெறுவது அரிதுதான். அந்த வரிசையில் மாளவிகா மோகனனை தென்னிந்தியாவின் செக்ஸி குயின் என்றே ரசிகர்கள் அழைக்கத் துவங்கி விட்டனர். கடந்த சில நாட்களாகவே அவர் இன்ஸ்டாவில் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பகிரப்பட்டு வருகின்றன.




























