வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 1ம் முதல் சென்னையில் இருந்து தினசரி 3,506 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. நவம்பர் 3ஆம் தேதி வரை சென்னையில் இருந்து மொத்தம் 9,806 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 6,734 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
நவம்பர் ஐந்தாம் தேதி தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு 8ம் தேதி வரை தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் சேர்த்து 17,719 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 4,319 சிறப்பு பேருந்துகளும், சென்னையை தவிர்த்து மற்ற இடங்களுக்கு 5 ஆயிரம் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
இந்தப் பேருந்துகளில் முன்பதிவு செய்ய விரும்புவோருக்காக கோயம்பேடு பேருந்துநிலையத்தில் 10 முன்பதிவு மையங்கள், தாம்பரம் சானிடோரியத்தில் 2 முன்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாகவும், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், புகார் தெரிவிப்பதற்கும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். சுங்கச்சாவடிகளில் தாமதமாவதைத் தடுக்க அரசுப் பேருந்துகள் தனிவரிசையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
























