உத்தரபிரதேசத்தில் உள்ள லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது கார் ஒன்று மோதியதில் 2 பேர் இறந்தனர். அதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட வன்முறையில் மேலும் 6 பேர் கொல்லப்பட்டார்கள். நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகவும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்
மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வந்த நிலையில், ஆஷிஸ் மிஸ்ராவை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் 2-வது முறையாக சம்மன் அனுப்பினர். அந்த சம்மன், அஜய் மிஸ்ராவின் வீட்டு வாசலில் ஒட்டப்பட்டது.

லகிம்பூர் கேரி போலீஸ் லைனில் உள்ள குற்றவியல் பிரிவு சிறப்பு விசாரணைக் குழுவின் முன் சம்மனில் தெரிவித்திருந்தபடி, ஆஷிஷ் மிஸ்ரா நேற்று காலை 10.35 மணிக்கு ஆஜரானார். அஜய் மிஸ்ராவிடம் 12 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய போலீசார், அவரை கைது செய்தனர். இதையடுத்து, நேற்று (சனிக்கிழமை) இரவு நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார், அஜய் மிஸ்ரா. தொடர்ந்து அஜய் மிஸ்ராவை 14 நாள் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி.
திங்கள் கிழமை காலை 11 மணிக்கு அஜய் மிஸ்ராவை ரிமாண்ட் செய்யும் போலீசாரின் மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார், மூத்த வழக்கறிஞர் எஸ்.பி யாதவ்.
























