சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி – நயன்தாரா நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடலாக சாரக் காற்றே பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தில் இருந்து ஏற்கனவே ‘அண்ணாத்த அண்ணாத்த’ என்கிற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப் பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார்.
இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தில் இருந்து ‘சார காற்றே’ என்கிற ரொமான்ஸ் பாடல் வெளியாகியிருக்கிற்து. டி.இமான் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர். யுகபாரதி இந்தப் பாடலை எழுதியுள்ளார். இப்பாடலில் ரஜினி மிகவும் இளமைத் துள்ளலோடு காதல் ரசம் சொட்ட நடித்திருக்கிறார். ரஜினி ரசிகர்கள் அக்காட்சிகளை பரவசத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.
























