தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரான பிறைசூடன் இன்று அவரது இல்லத்தில் காலமானார்.
தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களின் வரிசையில் தனக்கான தனித்த இடத்தை உருவாக்கிக் கொண்டவர் பிறைசூடன். பாடலாசிரியராக இவர் இதுவரை 400 திரைப்படங்களில் 1,400க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். அத்துடன் சுமார் 5000 பக்திப் பாடல்களும், 100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் எழுதியுள்ளார்.
பாடலாசிரியர் என்பதோடு நடிகராகவும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தீபாவளிக்கு வெளிவர இருக்கும் அண்ணாத்த திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார்.
பிறைசூடன் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றவர். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் “கலைச்செல்வம்” விருதையும் , கபிலர் விருதையும் பெற்றுள்ளார். இவர் சில காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் நெசப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் காலமானார். இத்தகவலை அவரது மகன் உறுதி செய்துள்ளார். அவருக்கு அஞ்சலி !
























