சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான கடைசிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.
டாஸ் ஜெயித்த பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ருத்துராஜ் கெய்க்வாடும் டூ ப்ளெசிஸும் தொடக்க ஆட்டக்காரர்களாக சென்னை அணியில் களமிறங்கினர். கெய்க்வாட் 14 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆக, அடுத்ததாக களமிறங்கிய மொயின் அலில் 6 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய ராபின் உத்தப்பா 2 ரன்கள், அம்பத்தி ராயுடு 4 ரன்களில் அவுட் ஆக என்னடா சோதனை இது என சென்னை ரசிகர்கள் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு உட்கார, என் தலைவன் வந்துட்டாண்டா என்று மார்தட்டி தோனியை வரவேற்க அவர் நான்கு முறை க்ளவுஸை கழற்றி மாற்றி 2 ஃபோர்கள் விளாசினாலும் 12 ரன்களில் அவுட் ஆனார். ஃப்ரியா விடு என் தலைவன் ஜடேஜா இருக்கான் என சென்னை ரசிகர்கள் அடுத்த டவுனுக்கு தயாராகினர். ஜடேஜா ஃபார்மில் இருக்கிறாரா இல்லையா என்பதையே பட்டிமன்றம் போட்டு விவாதிக்குமளவுக்கு அவரது பெர்ஃபாமன்ஸ் இருந்தது. ஒரே ஆறுதல் நல்ல ஃபார்மில் விளையாடிக்கொண்டிருந்த டூ ப்ளெசிஸ்க்கு ஸ்ட்ரைக் ரொடேட் செய்து கொண்டே விக்கெட்டைத் தாக்குப் பிடித்து நின்றார். கடைசி மூன்று பந்துகள் மீதமிருக்க டூ ப்ளெசிஸ் கேட்ச் அவுட் ஆக, பர்த்டே பேபி ப்ராவோ களமிறங்கி ஒரு ஃபோரை பறக்க விட்டதோடு ஆட்டம் முடிந்தது.
டூ ப்ளெசிஸ் மட்டும் இல்லைன்னா பொழப்பு சிரிப்பா சிரிச்சிடும் என்று சொல்லும்படியாக மனிதர் வெறித்தனம் பண்ணினார். 8 ஃபோர், 2 சிக்ஸ் என மொத்தம் 76 ரன்களை விளாசித்தள்ளினார். இன்றைய ஆட்டம் ஒன் மேன் ஷோதான். 135 ரன் இலக்கு என பஞ்சாப் களமிறங்கியிருக்கிறது.
























