யோகா ஆசிரியர் எனக்கூறு யோகா கற்றுத்தருவதாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாக சென்னையைச் சேர்ந்த பூவேந்திரன் மீது புகார்கள் எழுந்துள்ளன.
சென்னை கோடம்பாக்கத்தில் வசிப்பவர் பூவேந்திரன். இவர் தன்னை யோகா ஆசிரியர் என சொல்லிக்கொண்டு தனது பெயரை யோகராஜன் எனக் கூறி வந்துள்ளார். யோகா கற்றுத்தருவதாக பெண்களிடம் பாலியல் சார்ந்து தொடுவது, அவர்களிடம் அத்து மீறி நடப்பது உள்ளிட்ட செயல்களில் பல காலம் ஈடுபட்டு வந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டில் இருந்து யோகா கற்று கொள்ள வரும் பள்ளி மாணவிகள், பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள், உள்ளிட்டோரிடம் ஆசை வார்த்தைகளை கூறியும் அவர்களை, ஏமாற்றி பாலியல் உறவில் ஈடுபட்டும் அந்த பெண்களிடம் இருந்து பணம் உள்ளிட்டவைகளை பறித்துள்ளதாகவும் அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். சென்னை தி.நகர் காவல் துணை ஆணையரிடம் இது குறித்த ஆதாரங்களுடன் அடங்கிய புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
























