தீபாவளியைக் கொண்டாட சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் வெளி மாவட்ட குறிப்பாக தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பது வழக்கம். வருகிற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இம்முறை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்களில் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
அரசு விரைவு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பு முன் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இன்று தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கியது. http://tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும், டிஎன்எஸ்டிசி என்கிற செயலி வழியாக பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சிறப்பு பேருந்துகள் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் ,திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மக்கள் அதிகம் பயணம் செல்வர் என்பதால் கடந்த ஆண்டைப் போல 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்க வாய்ப்புள்ளது. சிறப்பு பேருந்துகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
























