உச்ச நீதிமன்றத்தில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டதாக தொடர்ந்த வழக்கில் அப்படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்று சொல்லப்படக்கூடிய உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு இறுதி நேரத்தில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டதாகக் கூறி மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் தயாராவதற்காக ஜனவரிக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 10, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
























