சிம்பு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாநாடு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி விட்டது. நடந்த நிகழ்வே திரும்பவும் நடப்பது போல் கிறிஸ்டோபர் நோலன் படம் மாதிரி ஏதேனும் புதுமையாக வெங்கட்பிரபு முயன்றிருக்கிறாரா என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கியப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வெங்கட்பிரபு படத்தைப் பொறுத்த வரை கலகலப்புக்குக் குறைவிருக்காது. சிம்புவும் வெங்கட் பிரபுவும் கைகோர்க்கும் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியிருந்தது. சிம்பு வெற்றி கொடுத்தே பல காலம் ஆகிவிட்ட நிலையில் சிம்புவுக்கு இத்திரைப்படம் கம்பேக் ஆக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில் இன்று காலை 10.45 மணிக்கு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படத்தில் முதலமைச்சர் கதாப்பாத்திரத்திலும், எஸ்.ஜே.சூர்யா போலீஸ் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். கிறிஸ்டோபர் நோலனின் டெனட் படத்தில் நடந்த ஒரு நிகழ்வு திரும்பவும் நடப்பது போலான காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. படத்திலும் அதனை வசனமாக வைத்துள்ளனர்.
ட்ரெய்லர் படம் பார்க்கத் தூண்டுமளவு சிறப்பாக வந்திருப்பதால் பட வெளியீட்டுக்கான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
























