உலக சுகாதார அமைப்பு சர்க்கரை அல்லாத இனிப்புகள் குறித்த புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இது உடல் எடையைக் கட்டுப்படுத்த சர்க்கரை அல்லாத இனிப்புகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக பரிந்துரைக்கிறது.
பெரியவர்கள் அல்லது குழந்தைகளின் உடல் கொழுப்பைக் குறைப்பதில் சர்க்கரை அல்லாத இனிப்புகளைப் பயன்படுத்துவதால் நீண்ட காலப் பலன்கள் எதுவும் கிடைக்காது என்பதை சான்றுகளின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. மதிப்பாய்வின் முடிவுகள் படி, சர்க்கரை அல்லாத இனிப்புகளின் நீண்டகாலப் பயன்பாட்டினால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம், அதாவது வகை 2 நீரிழிவு நோய், இருதய நோய்கள் மற்றும் பெரியவர்களில் இறப்பு போன்றவை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இது தெரிவிக்கிறது.
’சர்க்கரை அல்லாத இனிப்புகளை சாதாரண சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்துவது நீண்ட காலத்திற்கு எடைக் கட்டுப்பாட்டிற்கு உதவாது. மக்கள் சர்க்கரைப் பயன்பாட்டைக் குறைக்க இயற்கையான இனிப்புசுவையைக் கொண்ட பழங்கள், இனிப்புசுவை அல்லாத உணவுகள் மற்றும் பானங்களைப் பயன்படுத்துவது சிறந்தது” என்கிறார், WHO-ன் ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான இயக்குநர் பிரான்செஸ்கோ ப்ராங்கா.
மேலும் இந்தப் பரிந்துரை பற்பசை, தோல் கிரீம் மற்றும் மருந்துகள் போன்ற சர்க்கரை அல்லாத இனிப்புகளான தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் சுகாதாரப் பொருட்களுக்கு அல்லது குறைந்த கலோரி சர்க்கரைகள் மற்றும் சர்க்கரை ஆல்கஹால்கள் (polyols) ஆகியவற்றிற்கு பொருந்தாது மற்றும் இவை சர்க்கரை அல்லாத இனிப்புகள் என்ற வகைக்குள் வராது என்று WHO தெளிவுபடுத்துகிறது.
சர்க்கரை அல்லாத இனிப்புகள் பற்றிய WHO-ன் வழிகாட்டுதல், வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை நிலைநிறுத்துவதையும், உணவுத் தரத்தை மேம்படுத்துவதையும், உலகளவில் தொற்றாத நோய்களின் அபாயத்தைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஆரோக்கியமான உணவுமுறைகளின் ஒரு பகுதியாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.


























