குஜராத்தில் உன்னதமான முறையில், கல்விகற்க வசதியில்லாத மாணவர்களுக்குக் கற்பிக்கவேண்டி ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குஜராத்தின் சூரட் பகுதியில் குடிசைப் பகுதிகள், நடைபாதைகளில் வசிக்கும் ஏழை எளிய குழந்தைகளுக்காக நடமாடும் பள்ளி ஒன்று துவங்கப்பட்டுள்ளது. ஒரு தனித்துவமான முன்முயற்சியில், மேசைகள், தரைவிரிப்புகள், தொலைக்காட்சி, விளக்குகள், மின்விசிறி மற்றும் இணைய இணைப்பு ஆகியவற்றைக் கொண்டு மொபைல் வகுப்பறையாக பேருந்து மாற்றப்பட்டுள்ளது.

32 மாணவர்களுக்கு தினமும் 3 மணி நேரம் வகுப்புகள் இதில் நடத்தப்படுகின்றன. இந்த முயற்சியை சூரத்தைச் சேர்ந்த வித்யாகுஞ்ச்-வித்யாபீத் குழுமம் முன்னெடுத்துள்ளது.
இதுகுறித்து, ’’குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்று நான் நினைக்கிறேன். நடைபாதையில் வசிப்பவர்களுக்கும் கூட. ஏனெனில் கல்வியின் மூலம் அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும். இந்த நடமாடும் பேருந்துப் பள்ளியில் சாத்தியமான அனைத்து வசதிகளையும் வழங்க முயற்சித்துள்ளோம். தற்போது இந்த பேருந்தில் 32 குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர். ஆனால் எண்ணிக்கை அதிகரித்தால், நாங்கள் தலா 3 மணி நேரம் இரண்டு பேட்ச்களை நடத்துவோம்’’ என்று வித்யாகுஞ்ச் நிறுவனத்தின் நிர்வாகி கூறினார்.


























