மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் 93வது பிறந்த நாளை முன்னிட்டு அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்துக்குச் சென்று அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின் ’நடிப்பின் உச்சம் – நட்பின் இலக்கணம் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள்! அனல்பறக்கும் புரட்சிகர பராசக்தி வசனத்தை சிம்மக்குரலில் கர்ஜித்து தலைவர் கலைஞருடன் நட்புப் பாராட்டிய குணசேகரன் அவர்! கலையுலகம் உள்ளவரை அவரது புகழ் போற்றப்படும்’ என்று கூறியிருக்கிறார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் உருவாகிய பராசக்தி படம் திராவிட அரசியலைப் பேசியது. இன்றைக்கும் திராவிட அரசியலின் ஐகானாக இருக்கும் அத்திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவாஜி. கலைஞரின் வசனங்களுக்கு தன் நடிப்பாற்றல் மூலம் உயிரோட்டம் கொடுத்திருப்பார். அதனை மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.
























