நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்த நாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் அவருக்கென டூடுல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
கூகிள் நிறுவனம் தனது முகப்புப் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் முக்கியமான நிகழ்வு நாட்களை வைத்து டூடுல் வெளியிடும். அதன் அடிப்படையில் மறைந்த நடிகர் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களது படத்தை டூடுல் செய்து தன் முகப்புப் படமாக வைத்திருக்கிறது. இந்திய அளவில் பெரும் நடிகரான சிவாஜிக்கு கூகிள் மரியாதை செலுத்தியிருப்பது சிவாஜி ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. சிவாஜி தனது அபாரமன நடிப்பாற்றலால் நடிகர் திலகம் என கொண்டாடப்பட்டார். நடிப்பு என்றாலே அது சிவாஜி என்கிற ஒரு காலகட்டத்தை உருவாக்கி வைத்திருந்த கலைஞனுக்கு கூகிள் நிறுவனம் மரியாதை செலுத்தியிருப்பது போற்றுதலுக்குரியது.
























