அரிதான வகையில் 3 DNA-க்களுடன் கூடிய இங்கிலாந்தின் முதல் குழந்தை உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழந்தை IVF(In Vitro Fertilization) எனப்படும் கருத்தரித்தல் முறை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
Mitochondrial Donation Treatment (MDT) என்ற செயல்முறை மூலம் இக்குழந்தை உருவாக்கப்படுகிறது. அதாவது, தாயின் கருமுட்டையிலிருந்து கரு பிரித்தெடுக்கப்பட்டு (அதில் தாயின் DNA இருக்கும்) நன்கொடையாளரின் முட்டைக்குள்(இதில் நன்கொடையாளரின் DNA இருக்கும்) கரு உள்வைக்கப்படுகிறது.
இதன் மூலம் குழந்தை 99.8% DNA-வை பெற்றோரிடமிருந்தும், 0.1% DNA-வை நன்கொடையாளரிடமிருந்தும் பெறுகிறது. இம்முறை மூலம் அரிதான வகையில் குழந்தைகளுக்கு வரும் மரபணு சார்ந்த நோய்களைத் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
2015ம் ஆண்டு இங்கிலாந்தில், குறைபாடுள்ள மைட்டோகாண்ட்ரியாக்கள் மூலம் தாயிடமிருந்து குழந்தைகளுக்கு குறைபாடுடைய செல்களைக் கடத்துவதைக் கட்டுப்படுத்த சட்ட ஒழுங்குமுறைகள் கொண்டுவரப்பட்டன.
இவ்வாறான குறைபாடுடைய மைட்டோகாண்ட்ரியா மூலம் குழந்தைகளுக்கு மரபணு குறைபாடுகளான தசை சிதைவு, கால்-கை வலிப்பு, இதய பிரச்சினைகள் மற்றும் அறிவுசார்ந்த குறைபாடுகள் போன்ற நோய்கள் ஏற்படுகின்றதாம். இங்கிலாந்தில் 200 குழந்தைகளில் ஒன்று மைட்டோகாண்ட்ரியல் கோளாறுடன் பிறக்கிறது.
தவறான மைட்டோகாண்ட்ரியா கொண்ட ஒரு பெண்ணுக்கு, விஞ்ஞானிகள் அவளது முட்டை அல்லது கருவில் இருந்து மரபணுப் பொருளை எடுத்துக்கொள்கிறார்கள். பின்னர் அது நன்கொடையாளர் முட்டை அல்லது கருவுக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறாக மாற்றப்படும் கரு ஆரோக்கியமான மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டுள்ளதால் அது மரபணுக் கோளாறுகளிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது. உலகிலேயே முதல்முறையாக MDT மூலம் அமெரிக்காவில் முதல் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.


























