பிரையன் மெல்வின் என்ற நபர் ஒருவர் இறந்துபோய் மீண்டும் உயிர்பெற்று எழுந்த நிலையில், தான் இயேசு கிறிஸ்துவை சந்தித்ததாகவும், அடால்ஃப் ஹிட்லரை நரகத்தில் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.
பிரையன் மெல்வின் என்ற நபர் தனது மரண அனுபவத்தைப் பற்றி வினோதமான விஷயங்களை செய்திகளாக உருவாக்கிவருகிறார். இதுபற்றி விரிவாக விவரிக்கும் மெல்வின், தான் கெட்ட தண்ணீரைக் குடித்த காரணத்தால் காலராவால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், இறக்கும் வரை தான் ஒரு நாத்திகராக வாழ்ந்ததாகவும், இறந்த பிறகு தான் ஒரு கருப்பு வெற்றிடத்தில் நுழைவது போன்று உணர்ந்ததாகவும் தெரிவிக்கிறார்.
அதுமட்டுமல்லாது அவரது செய்திக்குறிப்புகளில், தனது உயிர் பிரிந்த நிலையில், தனது உடலுக்கு மேலாக தான் மிதப்பதைப் போல உணர்ந்ததாகவும், பிரகாசமான ஒளியை நோக்கி தான் நகர்ந்து சென்று இயேசு கிறிஸ்துவை சந்தித்ததாகவும், இயேசு தன்னை சொர்க்கத்திற்கு பதிலாக நரகத்திற்குச் செல்லச் சொன்னதாகவும் மெல்வின் கூறுயுள்ளார்.
இயேசுவை மட்டுமல்லாது நரகத்தில் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரையும் தான் சந்தித்ததாக மெல்வின் கூறியுள்ளார். இதுபற்றி, ’’நரகம் மிகவும் வெப்பமாகவும் பயங்கரமாகவும் இருந்தது. அங்கு தான் நான் ஹிட்லரைச் சந்தித்தேன். அவரது பாவங்களுக்கேற்ப அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஹிட்லர் உலை போன்றதொரு அமைப்பில் வைக்கப்பட்டு எரியவைக்கப்பட்டார். அவர் போலவே பல மனிதர்கள் ஆண், பெண், குழந்தை என்ற வேறுபாடின்றி கைது செய்யப்பட்டு, நரகத்திற்கு கொண்டுவரப்பட்டு தண்டனை வழங்கப்பெற்றனர்’’ என்று விவரிக்கிறார்.
இந்த நிகழ்வுக்குப்பிறகு நாத்திகராக இருந்த மெல்வின் தீவிர கிறுத்துவராக மாறி தனது அனுபவங்களையும், இயேசு கிறிஸ்துவின் மகிமைகளைப் பற்றியும் மக்களிடமும், தேவாலயங்களிலும் பேசிவருகிறார்.
மெல்வினுக்கு நடந்தது போன்றதொரு சம்பவம் தொடர்பான செய்தி சில மாதங்களுக்கு முன்பாக இணையத்தில் பரவிக்கொண்டிருந்தது. ஜெரால்டு ஜான்சன் என்ற பாதிரியார் ஒருவர் 2016ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், தனது ஆவி நரகத்திற்குச் சென்றதாக அவர் செய்தி வெளியிட்டிருந்தார். மேலும் Rihanna-வின் Umbrella மற்றும் Bobby McFerrin-ன் ‘Don’t Worry, Be Happy ஆகிய பாடல்களை ஒலிபரப்பியவாறு அங்கிருந்த பேய்கள் நரகவாசிகளைத் துன்புறுத்தியதாகவும், ‘இசை மூலம் கடவுளை வணங்காமல் இருந்ததால் தற்சமயம் அந்தப் பாடல் வரிகளே உங்களைத் துன்புறுத்துகின்றன’ என்று அவை கூறியதாகவும் ஜான்சன் தெரிவித்துள்ளார்.


























