ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் பீகார் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யதுவன்ஷ் குமார் யாதவ் பிராமணர்கள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியுள்ள கருத்து தற்சமயம் வைரலாகி வருகிறது.
பீகாரின் சுபவுல் பகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய யதுவன்ஷ் குமார் யாதவ், ’’டிஎன்ஏ பரிசோதனையில் பிராமணர்களின் பூர்வீகம் ரஷ்யா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் என்று தெரியவந்துள்ளது. மேலும் அவர்களின் பூர்வீகம் இந்தியா இல்லை என்றும் தெரிகிறது. அவர்கள் நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தி நம்மை ஆள முயற்சி செய்கின்றனர். இந்தியாவைப் பூர்வீகமாகக் கொள்ளாத அவர்கள் இங்கு வந்து செட்டில் ஆகிவிட்டனர். அவர்களை நாம் துரத்தவேண்டும்’’ என்று சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கு ஜனதா தளம் மற்றும் பாஜக கட்சிகளைச் சேர்ந்த பலர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதுபோன்ற கருத்துகள் வீண் விளம்பரத்திற்காகத் தெரிவிக்கப்படுகின்றன என்றும், யதுவன்ஷ் குமாரின் மனநிலை சீராக இல்லாததாலேயே இவ்வாறு அவர் பேசுகிறார் என்றும் அவர்மீது விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.


























