இணையத்தில் திகிலூட்டும் விதமான சில புகைப்படங்கள் வலம்வந்துகொண்டிருக்கின்றன. அதாவது, பாகிஸ்தானில் உள்ள சில கல்லறைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. கல்லறைகளுக்கு எதற்காகப் பூட்டு போடப்படவேண்டும் என்ற கேள்வி அதிரவைக்கும் உண்மையை வெளிப்படுத்துகிறது.
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவிவருகிறது. அங்குள்ள மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையையே கடும் சிரமத்தில் நகர்த்தவேண்டிய அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் அரசியல் தலைவர்களுக்குள் நிகழும் வேறு சில பிரச்சினைகளால் வன்முறை போன்ற சம்பவங்களும் அங்கு அதிகரித்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
விஷயம் இவ்வாறிருக்க அங்கு புதுவிதமான பிரச்சினை ஒன்று தலைதூக்கியுள்ளது. அங்கு, இறந்துபோன பெண்களின் உடல்கள் புதைக்கப்பட்ட கல்லறைகளுக்கு அவர்களது பெற்றோர் பூட்டுபோட்டு அவற்றை பாதுகாத்து வருகின்றனர். காரணம், இறந்த உடல்களைப் புணரும் அதீத காம இச்சை கொண்ட சில நபர்களால் பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டு பாலியல் உறவுக்கு பயன்படுத்தப்படுகின்றனவாம்.
மருத்துவ உலகில் பிணங்களோடு உறவுகொள்ளும் முறைக்கு ’நெக்ரோபிலியா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அங்கு ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றாராம். பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு என்பதால் அங்கு ஆட்சியாளர்களால் கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளதாம். இது அங்குள்ள இளைஞர்களை பாலியல் ரீதியாக அதிக தேவையுடையோராக மாற்றுவதால் இதுபோன்ற அருவருக்கத்தக்க நிகழ்வுகள் தலைதூக்கியுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
உலகிலேயே அதிக அளவில் ஆபாசப்படம் பார்க்கப்படும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


























