நெய்தல் கலைவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
வரும் ஏப்ரல் 28ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை நடைபெறவுள்ள நெய்தல் கலைத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சென்னையை சேர்ந்த ‘ஆன் த ஸ்ட்ரீட்ஸ் ஆப் சென்னை’ இசைக்குழுவினர் நடத்திய இசை நிகழ்ச்சி கடந்த 24ம் தேதி அன்று இரவு நடைபெற்றது. அப்போது, இசைக் கலைஞர்கள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு படகில் நின்று இசைக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சியை நடத்தினர்.

இதனை, கண்டுகளிக்க நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தூத்துக்குடி கடற்கரையில் கூடினர். இந்த நிகழ்ச்சியை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் கண்டு களித்தனர்.



























