ஆசிரியராகப் பணியாற்றிவந்த கர்ட்னி டில்லியா என்ற பெண், தனது ஆசிரியப் பணியை விட்டுவிட்டு வயது வந்தோர் பார்க்கக்கூடிய ஆபாசப் திரைப்படத் துறைக்குள் நுழைந்துள்ளார். தனது ஆசிரியர் பணிபற்றி டில்லியா பேசுகையில், அதனால் தன்னிடமிருந்தும் தனது மத நம்பிக்கைகளிலிருந்தும் தான் துண்டிக்கப்பட்டதுபோல் உணர்ந்ததாக அவர் கூறுகிறார்.
ஆசிரியையாக இருந்து சம்பாதித்ததை விட Onlyfans.com மூலம் ஆபாச நடிகையாக மாறி அதிக பணம் சம்பாதிப்பதாகக் கூறும் டில்லியா, தான் ஒரு கிறித்துவ ஆபாச நடிகையாக இருப்பதை எண்ணி பெருமைப்படுவதாகவும், கடவுள் தன்னை படைத்ததே இதன் மூலம் பிறரை இன்பம்பெற வைக்கவே என்றும் கூறுகிறார்.
துவக்கத்தில், டில்லியா தனது தொழில் தேர்வு குறித்து கண்டனங்களுக்கு ஆளவோமோ என்று பயந்துள்ளார். பின் டில்லியாவின் சந்தேகங்கள் கடவுள் அனுப்பிய ஒரு சைகையின் மூலம் மாறிவிட்டதாக அவர் கூறுகிறார்.
இதுபற்றி பேசிய அவர், “கடவுளின் செய்தி மிகவும் தெளிவாக உள்ளது: நான் ஒரு ஆபாச நட்சத்திரமாக இருக்கவே கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளார். இது எனது சேவை வழி’’ என்று கூறுகிறார். மேலும், ‘’பாலியல் தொழிலிலோ, ஆபாசப் படங்கள் மூலமாகவோ நான் பிறருக்கு இன்பமளிப்பதன் காரணமாக நான் கடவுளுக்கு முரணானவள் என்றோ, கடவுளிடமிருந்து துண்டிக்கப்பட்டவள் என்றோ பொருளல்ல. அவை கடவுளுடன் ஒன்றுபட்டவை மற்றும் புனிதமானவையும் கூட’’ என்கிறார் டில்லியா. மேலும் தனது ஆபாசத் தொழில் தன்னை இன்னும் கடவுளுடன் நெருங்கவைப்பதாக அவர் கூறுகிறார்.
கடவுள் மற்றும் அவரது நம்பிக்கை பற்றி தனது எண்ணங்களை வெளிப்படுத்திய டில்லியா, கடவுளுக்கு அஞ்சக்கூடாது என்றும், அவர் ‘அன்புள்ளவர்’, ‘ஏற்றுக்கொள்பவர்’ மற்றும் ‘தீர்மானிக்காதவர்’ என்றும் கூறினார். இனிமேல் ஆசிரியர் ஆடையை தான் அணியப்போவதே இல்லை என்று டில்லியா சூளுரைக்கிறார்.


























