சிலி நாட்டில் ஒரு முட்டையின் விலை ரூ.21,000 என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? நீங்கள் நம்பவில்லையென்றாலும் அதுதான் நிஜம். ஒரு நகைச்சுவைக்காட்சியில் ஒரு தள்ளுவண்டிக்காரரிடம் வடிவேலு காய்கறிகளின் விலையைக் கேட்கும்போது ஒரு கிலோ கேரட்டை ரூ.1000, ரூ.2000 என்று வியாபாரி சொல்வார். அதற்கு, ’ஒருகிலோ கேரட் 1000-ஆ’ என்று அலறியவாறு அந்தக் கடையை வடிவேலு அடித்து நாசம் செய்வதுபோல் காட்சி அமையும். அப்படி, நாம் சொற்ப விலைக்கு வாங்கிக்கொண்டிருக்கும் பொருட்களின் விலை, பொருளாதார மந்தநிலை காரணமாக உலக பெரும்பாலான நாடுகளில் பயங்கர விலைக்கு விற்கப்படுவது அச்சத்தையே அதிகரிக்கச்செய்கிறது.
சிலி நாட்டில் கடந்த ஆண்டு பறவைக்காய்ச்சல் நோய் வெகுவாகப் பரவிய நிலையில், சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டன. இதனால் அங்கு கோழி இறைச்சி மற்றும் கோழி முட்டைக்கான தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக இறைச்சி மற்றும் முட்டை சந்தைப்படுத்துதல் அங்கு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அங்கு முட்டையின் விலை சுமார் 35% அதிகரித்துள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் அங்கு ஒரு முட்டையின் விலை ரூ.21,294-க்கு விற்கப்படுகிறது. இந்த விலையேற்றம் அந்நாட்டு மக்களை கடும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் வரத்துக் குறைவால் முட்டை ஏற்றுமதியும் தற்காலிகமாக அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.


























