கனடா நாட்டைச் சேர்ந்த செயின் வான் கொலுஸ்ஸி என்ற நடிகர் பிரபல K-pop சூப்பர் பேண்ட்-ன் BTS பாடகர் ஜிமினைப் போல மாறவேண்டி முகத்தில் செய்துகொண்ட அறுவை சிகிச்சைகளின் காரணமாக உயிரிழந்துள்ளார். முகத்தில் செய்துகொண்ட அறுவை சிகிச்சைகளினால் ஏற்பட்ட அசௌகரியங்களின் காரணமாக தென்கொரியாவின் மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற அவர் கடந்த ஞாயிரன்று தனது 22 வயதில் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்க ஸ்ட்ரீமிங் நெட்வொர்க்கில் K-pop star-ஆக தன்னை காண்பித்துக்கொள்ளவேண்டி கொலுஸ்ஸி 12 முக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் சுமார் 2,20,000 டாலர்களை செலவழித்துள்ளார். 2022 நவம்பரில் தனது தாடையில் பொருத்தப்பட்ட உள்வைப்புகளை அகற்ற கடந்த சனிக்கிழமை இரவு இவருக்கு அறுவை சிகிச்சையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாடைகளின் உள்ளே பொறுத்தப்பட்ட உள்வைப்புகளில் இருந்து அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிகிச்சையிலிருந்த அவர் சில மணிநேரங்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளார்.
6 அடி உயரமும், கருமையான பொன்னிற முடி மற்றும் நீல நிறக் கண்களுடன் 182 பவுண்டுகள் எடை கொண்ட கொலுஸ்ஸி தனது தோற்றம் குறித்து மிகுந்த பாதுகாப்பற்ற நிலையில் இருந்துவந்ததாக அவருடன் பணியாற்றிவந்த சக கலைஞராக பிளாக் கூறுகிறார்.
மேலும் கூறிய பிளாக், ’’அவருக்கு மிகவும் சதுரமான தாடை மற்றும் கன்னம் இருந்தது; மேலும் அதன் வடிவம் அவருக்குப் பிடிக்கவில்லை. ஏனென்றால் அது மிகவும் அகலமானது மற்றும் பல ஆசியர்களின் முகவடிவமான V-வடிவம் போன்றே தனக்கும் உள்ளதாக அவர் நினைத்தார். தாடை அறுவை சிகிச்சை, உள்வைப்புகள், முகம், மூக்கை மாற்றுதல், கண்களை மேலாகத் தூக்குவது, புருவத்தை உயர்த்துவது, உதட்டின் அளவைக் குறைப்பது மற்றும் வேறு சில சிறிய அறுவை சிகிச்சைகள் உட்பட 12 முக அறுவை சிகிச்சைகளை கொலுஸ்ஸி கடந்த ஆண்டில் செய்தார். தாடை உள்வைப்பு அறுவை சிகிச்சை எவ்வளவு ஆபத்தானது என்று தெரிந்திருந்தும் கொலுஸ்ஸி அதைப் பெறவே விரும்பினார்’’ என்று தெரிவித்தார்.


























