நியூசிலாந்து நாட்டில் ஒவ்வொரு வருடமும் வினோதப் போட்டி ஒன்று நடத்தப்படுகிறது. அதாவது, அங்கு காட்டில் வாழும் பூனைகளால் உயிரியல் அசமநிலை ஏற்படுகிறதாம்.
உயிரியல் சமநிலை என்பது இயற்கையிலேயே ஒவ்வொரு உயிரினத்தையும், அதைவிட பலம்வாய்ந்த, பெரிய உயிரினம் வேட்டையாடுவதன் மூலம் அதன் எண்ணிக்கை ஒரே அளவில் நீடிக்கும். எந்தவொரு உயிரினமும் இந்த Balanced எண்ணிக்கையில் நீடிக்கும்பொழுது உயிரியல் சமநிலை உண்டாகும்.
இந்த நிலையில் தான் இந்தப் பூனைகளின் அதிகரிப்பு காரணமாக அப்பகுதியில் வாழும் எலிகள், பூச்சிகள், வவ்வால்கள், பல்லிகள் உள்ளிட்ட உயிரினங்கள் அளவுக்கதிகமாக வேட்டையாடப்பட்டு அவற்றின் என்ணிக்கையை குறைத்துவிடுகிறதாம். இதன் காரணமாகவே அங்குள்ள மக்களுக்கு காட்டுப்பூனைகளைக் கொல்லும் இந்த வினோதப் போட்டி நடத்தப்படுகிறது.
இதுவரை வயதுவந்தோர் மட்டும் அனுமதிக்கப்பட்டுவந்த இப்போட்டியில் இந்த ஆண்டிலிருந்து 14 வயதுடைய மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய சிறுவர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் கலந்துகொண்டு வெற்றிபெறும் நபருக்கு ரூ.12,000 வரையிலான பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத விதமாக விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் சமூகநல அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த ஆண்டு இந்தப் போட்டி நடைபெறுவது ரத்துசெய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்த ஆண்டு இதற்கான அனுமதிகள் பெறப்பட்டு இப்போட்டி நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


























