இதுவரை இல்லாத புதுப்புரளியாக தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியரின் விவாகரத்திற்கு ஸ்ருதிஹாசன் தான் காரணம் என்று பரவலாக ஒரு தகவல் வலம்வந்துகொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவின் நட்சத்திரத் தம்பதி என்று ரசிகர்கள் பலராலும் விரும்பப்படுபவர்கள் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி. ரஜியின் மகளான ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் இயக்குநரகா சில படங்கள் இயக்கியுள்ள நிலையில், தனுஷ் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம்வந்துகொண்டிருக்கிறார். இத்தம்பதியருக்கு கடந்த 2004ல் திருமணமானது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், அதிர்ச்சியளிக்கும் விதமாக கடந்த ஆண்டின் துவக்கத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியர் விவாகரத்து செய்துகொள்ளவிருப்பதாகவும், பரஸ்பரம் பிரிந்துவாழ முடிவெடுத்திருப்பதாகவும் வலைதளங்களில் அறிவித்தனர். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது. மேலும் இதுகுறித்த காரணங்கள் வதந்தி வடிவிலாக ’’ஒருவேள அதுவா இருக்குமோ… ஒருவேள இதுவா இருக்குமோ’’ என்ற ரீதியில் றெக்கை கட்டிப் பறக்கத் துவங்கின.
பின் அவர்கள் மீண்டும் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. சினிமாவின் சில முக்கியப் புள்ளிகள் அவர்களைச் சேர்த்துவைப்பது தொடர்பாக பேசிவருவதாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுகுறித்து முயற்சிகள் மேற்கொள்வதாகவும் கூறப்பட்டுவந்த நிலையில், எதுவும் எடுபடவில்லை. தொடர்ந்து இவர்கள் எதிலும் ஒன்றாக்க் கலந்துகொள்ளவும் இல்லை. மகன்கள் மட்டும் தனுஷுடன் சேர்ந்து சினிமா உள்ளிட்ட விழாக்களில் கலந்துகொண்டு வந்தனர்.
இந்நிலையில், தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியரின் விவாகரத்திற்கு ஸ்ருதிஹாசன் தான் காரணம் என்று ஒரு செய்தி பரவிவருகிறது. அதாவது தனுஷ் – ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கியிருந்த ’3’ படத்தின் காரணமாக இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து இருவரும் டேட்டிங் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது ஐஸ்வர்யாவிற்கு வெறுப்பை ஏற்படுத்தியதாகவும், அதுவே விவாகரத்து வரை இந்த ஜோடியை கொண்டுவந்து நிறுத்தியதாகவும் கூறப்பட்டு தகவல்கள் பரவிவருகின்றன.
ஆனால் இதை தடாலடியாக மறுக்கும் ஸ்ருதிஹாசன், தனுஷ் தனக்கு நல்ல நண்பர் என்றும், தனது பிசினஸ் சார்ந்த விஷயங்களில் தனக்கு தனுஷ் நிறைய உதவி செய்துள்ளார் என்றும், சமூகவலைதளங்களில் பேசப்படும் விஷயங்கள் அனைத்தும் வதந்தி என்றும் கூறுகிறார். எது எப்படி இருந்தாலும், இந்த ஜோடி சேர்ந்துவிடாதா என்று எதிர்பார்ப்பே ரசிகர்களிடம் மிகைத்துக் காணப்படுகிறது.


























