நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மலேசியாவின் கோலாலம்பூர் பகுதியில் நடைபெற்ற இன்விடேஷனல் ஏஜ் குரூப் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இதுகுறித்து நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், கடவுளின் ஆசிர்வாத்த்தாலும், அனைவரின் வாழ்த்துகளாலும் வேதாந்த் இந்தியாவிற்காக 50மீ, 100மீ, 200மீ, 400மீ, 1500மீ பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றிருப்பதாகவும், இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இ ந் நிலையில், இதைக் குறிப்பிட்டு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், ’உங்களுடைய அர்ப்பணிப்பு மற்றும் வேதாந்தை சரியாக வளர்த்துள்ள காரணத்தால் இதற்கான பாராட்டுகள் அனைத்தும் உங்களையும், உங்கள் மனவியையுமே சாரும். இறைவன் ஆசிர்வதிக்கட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதர்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் மாதவன், உங்கலிடமிருந்து இந்த வாழ்த்தைப் பெறுவதில் எங்களுக்கும் முக்கியமாக வேதாந்துக்கும் ஒரு மிகமுக்கிய அங்கீகாரம். உங்கள் வாழ்த்து எங்கள் இதயங்களைத் தொட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


























