வானில் வித்தியாசமான தோற்றத்துடன் ஒரு ஒளிக்கூட்டம் தெரிவது போன்ற காணொலி இணையத்தில் வேகமாக பரவிவருகிறது.
பொதுவாக வானில் அவ்வப்போது அரிதான ஏதேனும் காட்சிகள் நிகழும். திடீரென வானைக் கிழித்துக்கொண்டு போகும் ஒளி, வட்டவடிவில் ஒளிப்பிழம்புகளுடன் தோன்றும் தட்டு, பலவண்ண நிறங்களில் தோன்றும் ஒளிக்கீற்றுகள் என மக்களை பரவசத்தில் ஆழ்த்தும் இதுபோன்ற ஆச்சர்ய நிகழ்வுகள் வானில் தோன்ருவதும் மறைவதும் உண்டு.
இவ்வாறு புதுமையான ஒளிக்கூட்டம் ஒன்று வானில் தோன்ரும் கானொலி ஒன்று ட்விட்டரில் வெளியாகி வைரலாகிவருகிறது. Wow Terrifying என்ற வித்தியாசமான காணொலிகளை பதிவிடும் ட்விட்டர் பக்கத்தில் இந்தக் காணொலி பதிவிடப்பட்டுள்லது. சாலையில் சென்று கொண்டிருக்கும் நபர் திடீரென வானில் தோன்றும் ஓர் ஒளிக்கூட்ட்த்தை தனது செல்போனில் வீடியோ எடுக்கிறார். அந்த ஒளி சிறிது நேரம் வானிலேயே நீடிக்கிறது. இந்தக் காணொலி சுமார் 17 வினாடிகளைக் கொண்டுள்ளது.
இதுகுறித்து காணொலிக்குக் கீழ் கருத்திட்ட்தில் சிலர் இக்காட்சி 1998ம் ஆண்டு வெளியான அறிவியல் உனைவு கதையான தி ட்ரூமன் ஷோ அட்த்தின் காட்சிகளை ஒத்திருஅதாக்க் கூறுகின்றனர். மேலும் சிலர் 221ம் ஆண்டு வெளியான A Glitch in the Matrix ஆவணாட்த்தை இக்காட்சிகள் ஒத்திருஅதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால் பெருமாலானோர் உயரமான ஒரு கட்டிட்த்தில் கிரேன் உதவியுடன் கட்டுமானப் பணிகள் நடந்துவருவதாகவும், பனிமூட்டத்தின் காரணமாக கட்டிடம் மறைந்து அவ்வாறு தெரிவதாக கருத்திட்டுள்ளனர். எனினும் சிலர் ஏதேனும் வேற்றுகிரக மனிதர்களின் பறக்கும் தட்டு போன்ற அம்சமாக இது இருக்கலாம் என்று கருத்திட்டுள்ளனர்.


























