உலகெங்கிலும் தற்சமயம் மாரடைப்பு காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. குறிப்பிட்ட வயதிற்குப் பிறகுதான் மாரடைப்பு ஏற்படும் என்ற எல்லைகளைக் கடந்து சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை வயதுவரம்பில்லாமல் பலரும் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துவருகின்றனர்.
சரிவிகித உணவு எடுத்துக்கொள்ளாமை, உணவில் காய்கறி பழங்களை தவிர்ப்பது, உடலுழைப்பு, நடைபயிற்சி குறைந்து போனது, போன்றவை மாரடைப்புக்கான காரணங்களாக மருத்துவர்களால் கூறப்பட்டாலும் மன அழுத்தம் முக்கிய இதற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் திடீர் மனத்தாக்குதல் மற்றும் நாள்பட்ட கவலையால் ஏற்படும் மனத்தாக்குதல் என்று மருத்துவ உலகம் பிரிக்கிறது. இவை இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன?
பீதி அல்லது திடீர் மனத் தாக்குதல் என்றால் என்ன?
ஒரு பீதி அல்லது திடீர் தாக்குதல் என்பது பயத்தின் திடீர் அத்தியாயமாகும். இது எந்த வித அறிகுறியும் இல்லாமலும், வெளிப்படையான காரணம் இல்லாதபோதும் கடுமையான உடல் எதிர்வினைகளைத் தூண்டுகிறது. நீண்டகால கவலையால் அவதிப்படுவதும் இந்த பீதி தாக்குதல்களைத் தூண்டும்.
“பீதி என்பது ஒரு விரைவான பயத்தின் உணர்வு. இது கட்டுப்படுத்த முடியாததாகத் தோன்றுகிறது மற்றும் ஒருவரை அவர்களின் சூழலைத் தெளிவாகச் செயல்படுத்துவதைத் தடுக்கிறது. இது உடல் மற்றும் உளவியல் அறிகுறிகளுடன் சேர்ந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், எந்த வெளிப்படையான காரணமும் இல்லாமல் ஒரு நபருக்குள் பயம் திடீரென எழுகிறது. பீதி தாக்குதலின் ஆரம்பம் திடீரென்று, ஒரு எச்சரிக்கை இல்லாமல் நிகழ்கிறது. ஒரு மனிதர் பீதி தாக்குதலால் பாதிக்கப்படும்போது, ஏதோ ஒரு ஆபத்து அவருக்கு வரவிருப்பதாக அவர் கணநேரத்தில் உணர்வார். மேலும் இதயத் துடிப்பு, வியர்த்தல், நடுக்கம், குளிர், குமட்டல், வயிற்று வலி, தொண்டையில் இறுக்கம் போன்ற உணர்வுகளை அவர் அச்சமயம் அனுபவிப்பார்.
கவலையால் ஏற்படும் மனத் தாக்குதல் என்றால் என்ன?
ஒரு கவலை தாக்குதல் பொதுவாக சில குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது நிகழக்கூடிய பிரச்சனை பற்றிய பயத்தை உள்ளடக்கியது. கவலை மனத் தாக்குதல், பீதி தாக்குதலிலிருந்து வேறுபட்டது என்றாலும், இது ஏதேனும் ஒரு கவலை அல்லது பீதிக் கோளாறின் ஒரு பகுதியாக ஏற்படலாம்.
“கவலை, பதட்டம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்களுடன் விரும்பத்தகாத எண்ணங்களின் சங்கிலி, மேலும் விரும்பத்தகாத ஒன்று நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்பு, கவலை என்று அழைக்கப்படுகிறது,” இது உடலில் உங்கள் இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், இன்சுலின் அளவு போன்ற இன்னும் சிலவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தும்” என்று ஜிண்டால் இன்ஸ்டிடியூட் ஆப் பிஹேவியோரல் சயின்ஸின் உதவிப் பேராசிரியை டாக்டர் நமிதா ரூபரேல் கூறுகிறார்.
பெரும்பாலும், கவலை காரணமான மனத் தாக்குதல் மற்றும் திடீர் பீதியால் ஏற்படும் மனத் தாக்குதல் போன்ற இரண்டு மனநல கோளாறுகளும் ஒரு சூழ்நிலையை விவரிக்க ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், அவை ஒரே மாதிரியானவை அல்ல என்பதை அறிவது மிகவும் முக்கியம். ஹெல்த்லைனின் கூற்றுப்படி, “கவலையினால் ஏற்படும் மனத் தாக்குதல் சில அழுத்தங்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஏற்படுகிறது மற்றும் படிப்படியாக உருவாகலாம்; அதே நேரத்தில் பீதி தாக்குதல்கள் எதிர்பாராத விதமாகவும் திடீரெனவும் ஏற்படலாம்.
பொதுவாக, ஒரு பீதியால் ஏற்படும் தாக்குதல் கவலையால் ஏற்படும் தாக்குதலை விட கடுமையானது. ஆனால் அதிக அளவு கவலை மற்றும் மன அழுத்தம் பீதி தாக்குதல்களுக்கு வழிவகுக்கும். ஒரு பீதி தாக்குதல் திடீரென ஏற்படுவது மற்றும் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் நிகழ்கிறது, மேலும் ஏதோ ஓர் அசம்பாவிதம் நிகழப்போவதாக ஒரு அச்சுறுத்தல் உணர்வை அது அளிக்கிறது.
இரண்டுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகள்
பீதி தாக்குதல் மற்றும் கவலை தாக்குதல்களில் அனுபவிக்கும் உடல் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், இரண்டிற்கும் இடையே ஒரு தனித்துவமான வேறுபாடு உள்ளது. “பீதி தாக்குதல்கள் திடீரென்று ஏற்படுகின்றன, அதே நேரத்தில் கவலை தாக்குதல்கள் படிப்படியாக எண்ணங்களின் மீது கட்டமைக்கப்படுகின்றன,” என்று டாக்டர் ரூபரேல் தெளிவுபடுத்துகிறார்.
தொடர்ந்து இது குறித்து விளக்கும் ரூபரேல், ’இந்த தாக்குதல்களின் நிகழ்வு பற்றிய விழிப்புணர்வு, முறையான நோயறிதலைத் தொடர்ந்து பரிந்துரைக்கப்படுகிறது. தியானம், உடலை தளர்வாக வைத்துக்கொள்ளுதல், சுவாசப் பயிற்சிகள் போன்றவை இந்த இரண்டு மனத் தாக்குதல்களிலிருந்தும் சமாளிக்க உதவும்’ என்று கூறுகிறார்.


























