இந்தியர்களிடையேயான பாலியல் வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளதா? அவர்கள் தங்கள் பாலுறவில் திருப்தியடைகின்றனரா? என்பது போன்ற பாலுறவு குறித்த பல்வேறு கேள்விகளுக்கான முடிவுகள் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று மேற்கொண்ட 2023ம் ஆண்டின் சர்வேயின் மூலம் வெளியாகியுள்ளன.
மனிதர்களுக்கு வாழ்வில், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் உள்ளிட்ட தேவைகள் புற வாழ்வுக்கு எவ்வளவு முக்கியமோ அதே போல் தான் அக வாழ்க்கைக்கு உடல் ரீதியாக வைத்துக்கொள்ளும் தாம்பத்திய உறவின் இன்பம் மிக முக்கியம்.
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில், பாலியல் ரீதியான அறிவு மேலோங்கிவிட்ட நிலையில், ஆண்-பெண் உறவுமுறை என்ற நிலை மாறி இயற்கையின் அங்கங்களான ஒருபாலீர்ப்பு, இருபாலீர்ப்பு, பலபாலீர்ப்பு போன்ற பல பாலியல் விருப்பங்கள் நம்மிடையே வந்துவிட்டன. அதே போல் மனிதரிடமிருந்து மட்டுமே ஆலியல் இனம் எற முடியும் என்ற நிலை மாறு அதற்கான இரத்தியேக டாய்ஸ்-களும், மாதிரி பொம்மைகளும் கூட வந்துவிட்டன.
பாலியல் உறவில் இருவருக்கிடையேயான நாட்டம் உறவிற்கு எத்தனை முக்கியமோ அதே போல், உறவினால் பெறும் இன்பமும் இங்கு கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அதனடிப்படையில் இந்தியர்களின் பாலுறவு வாழ்க்கை எப்படி இருக்கிறது? எம்மாதிரியான பாலியல் விருப்பங்கள் இந்தியர்களிடையே அதிகரித்துள்ளன/ குறைந்துள்ளன என்பது போன்ற பல தகவல்கள் பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே மேற்கொண்ட இந்த ஆண்டிற்கான சர்வேயில் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்தியாவிலேயே தாம்பத்திய உறவில் அதிகம் திருப்தியடைவோரைக் கொண்ட நகரமாக லக்னோ விளங்குகிறது. இங்கு 94% பேர் தங்களது பாலியல் வாழ்க்கையில் திருப்தியடைவதாக சர்வேயில் தெரியவந்துள்ளது. அதே போல், கேரளாவின் கொச்சி நகரத்தில் 87% பேர் தங்கள் வாழ்க்கையில் தினமும் பாலியல் உறவு வைத்துக்கொள்வதாக இந்த ப்சர்வே கூறுகிறது. பெங்களூரு நகரத்தில் 84% மக்கள், தங்கள் பாலியல் உறவில் ஆண் – பெண் இடையே திருப்தியடைவதில் மாறுபடுவதாக குற்றம்சாட்டிக்கொள்கின்றனராம்.
இந்தியர்களிடையே பாலியல் உறவில் திருப்தியடையும் தன்மை குறைந்துவருவதாக அதிரவைக்கும் உண்மையை இந்த சர்வே வெளிக்கொண்டுவந்துள்ளது. இது குறித்து, “நீங்கள் உங்கள் பாலியல் வாழ்க்கையில் இன்னும் அதிக இன்பத்தை விரும்புகிறீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 57.2% பேர் ’ஆம்’ என்று பதிலளித்துள்ளனர். அதே போல் ”நீங்கள் உங்கள் பாலியல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்களா? என்ற கேள்விக்கு 19% பேர் ’இல்லை’ என்று பதிலளித்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2018ல் 5.5%ஆகவும், 2019ல் 8% ஆகவும் இருந்து தற்சமயம் உயர்ந்துள்ளது குறிப்பிட்த்தக்கது.
அதே போல் தானாக சுயஇன்பம் செய்துகொள்வோரின் சதவீதமும் இந்தியர்களிடையே கவனிக்கும்படியான அளவிற்கு மாற்றங்களை அடைந்துள்ளது. 2017ம் ஆண்டு தங்களுக்குள் அடிக்கடி சுயஇன்பம் செய்துகொள்வோரின் சதவீதம் 26.5%-ஆக இருந்தது தற்சமயம் 19%-ஆகக் குறைந்துள்ளது. அதே போல் 2017ல் 39%-ஆக இருந்த சுயஇன்பம் செய்யாதோரின் எண்ணிக்கை தற்சமயம் 37%-ஆக சரிந்துள்ளது. ஆனால், 2017ல் எப்பொழுதாவது சுயஇன்பம் செய்வோரின் சதவீதம் 34%லிருந்து தற்சமயம் 44.5%-ஆக அதிகரித்துள்ளது. இது சென்ற ஆண்டிற்கான 51%-லிருந்து குறைவான சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
”பாலியல் இன்பத்தை செக்ஸ் டாய்ஸ் அதிகரிக்கிறதா?” என்ற மற்றொரு கேள்விக்கு ஆண்களில் 38.5% பேர் ’ஆம்’ என்றும், பெண்களில் 36.1% பேர் ’ஆம்’ என்றும் பதிலளித்துள்ளனர். அதாவது இது 50%-க்கும் அதிகமான நபர்களிடையே பாலியல் இன்பத்தை அதிகரிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.


























