நீதிபதியாகப் பணியாற்றிக்கொண்டு ஆபாச நடிகராக இருந்துவந்த கிரெகோரி எ.லாக் என்ற நபர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றுபவர் 33 வயதான கிரெகோரி எ.லாக். இவர் பகல் நேரங்களில் நீதிவழங்கும் நீதிபதியாகவும், இரவு நேரங்களில் ஆபாச காணொலிகளை அள்ளிவழங்கும் ஆபாச நடிகராகவும் இருந்துவந்துள்ள செய்தி தற்சமயம் வெளியாகியுள்ளது.
Onlyfans என்ற கணக்கில் தனது ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வேலைகளில் கிரெகோரி ஈடுபட்டுள்ளார். தனது ஆபாச படங்கள் மற்றும் காணொலிகளைப் பார்க்க மாதம் 12 டாலர்கள் என்ற விதத்தில் இவர் வசூலித்துள்ளார். இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் வலைதளங்களில் இதற்கென பிரத்தியேக கணக்கு வைத்துள்ள இவர் தனது ஆபாச வீடியோக்களை அதில் பகிர்ந்து பிரபலப்படுத்தச் செய்துள்ளார்.
சுமார் 100 ஆபாச வீடியோக்களை இதுவரை Onlyfans கணக்கில் பதிவேற்றம் செய்துள்ள இவர் JustFor.Fans என்ற மற்றொரு கணக்கிலும் தனது ஆபாச காணொலிகளைப் பதிவேற்றி அவற்றைக் காண மாதம் 9.99 டாலர் வசூலித்துள்ளார். தனது Onlyfans பக்க சுயவிவரக் குறிப்பில், ”பகலில் வெள்ளை காலர் பணியாளர், இரவில் வேறுதொழில் பணியாளர்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் தனது ஒரு பதிவில், ”என்னை ஏதேனும் ஒரு ஆண் கருத்தரிக்கச் செய்வதன் மூலம் நான் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவேன்” என்று பதிவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தான் ஒரு நீதிபதி என்று தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துவிட்டு தொடர் ஆபாச படங்களை பதிவிட்டு வந்ததாக விசாரணை குறித்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில், அவரது நடத்தை NYC அதிகாரிகளால் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, நீதித்துறைக்கு களங்கம் விளைவிக்கும்படி நடந்துகொண்டமைக்காக அதிகாரிகளால் கிரெகோரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


























