லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம், ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இவர் இந்தப் படத்தில் பயன்படுத்தும் நவீன கேமரா குறித்து பகிர்ந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், இதன் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
https://www.instagram.com/p/CpZWqvEA941/
சிறப்பம்சங்கள்:
– Full Frame 8K Sensor w/ 6K S35 Mode et. al.
– 2 SDI Ports
– 5pin LEMO for Audio
– No Accessory Power
– No Timecode or Genlock Ports***
– Redcode Raw & ProRes w/ Proxy
– LEMO Power
– RF Mount (PL, EF, etc adaptable)
– “17 stops” of Dynamic Range
– Robust Build Quality
– Reliable Recording Media
– Full Image Control
– No Internal NDs
இப்படத்தில் ரெட் கேமரா வகைகளில் அதிநவீன கேமராவான ‘வி ராப்டார் எக்ஸ் எல்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது. காஷ்மீரில் நிலவும் கடும் பனி காரணமாக காட்சிகளை துல்லியமாக எடுக்க இந்தக் கேமராவை படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹன்சா தேர்ந்தெடுந்துள்ளார். இது சினிமா படங்கள் எடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டது என்பதால், பெரும்பாலான ஒளிப்பதிவாளர்களின் தேர்வாகவும் இது இருக்கிறது. புதிதாக ஒருவர் இந்த கேமராவை வாங்குகிறார் என்றால், அவர் பயிற்சி பெற்றவராக இருந்தாலும், இதை முழுமையாக கற்க ஒரு வாரம் தேவைப்படும் என்றும் சொல்கிறார்கள். இதிலிருக்கும் 98kWh பேட்டரி, ஒரு முழுமையான சார்ஜிங்கில், 100 நிமிடங்கள் வரை ஒளிப்பதிவு செய்ய உதவும். பெரும்பாலும் 8கே தரத்தில் இது ஒளிப்பதிவு செய்யும் என்பதால், சாதாரண கேமரா மெமரி கார்டை பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்ய முடியாது. மாறாக எஸ்எஸ்டி கேமராக்களை பயன்படுத்த அறிவுறுத்துகிறார்கள்.
இதன் விலை ரூ.28,71,559. வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றால், ஒரு நாளைக்கு ரூ.85 ஆயிரம் வரை வசூலிக்கிறார்களாம்!

























