சிவகார்த்திகேயனின் ‘SK Productions’ நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வளர்ந்துவருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘அயலான்’ திரைப்படம் விரைவில் திரைக்குவரவிருக்கிறது. மேலும் இவர் ’மாவீரன்’, ’SK24’ உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.
நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் உள்ளிட்ட பல பரிமாணங்களிலும் சிவகார்த்திகேயன் பயணித்துவருகிறார். இவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ’SK Productions’ நிறுவனம் இதுவரை ’கனா’, ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ’வாழ்’, ’டாக்டர்’, ’டான்’ உள்ளிட்ட ஐந்து படங்களைத் தயாரித்துள்ளது.
இவற்றில் ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படம் தவிர்த்து பிற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும் ’டாக்டர்’ மற்றும் ’டான்’ ஆகிய படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தன.
இந்நிலையில், தனது ’SK Productions’ நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பை சிவகார்த்திகேயன் தற்சமயம் வெளியிட்டுள்ளார். அதன்படி தான் தயாரிக்கும் 6வது படத்தின் Title FirstLook நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்றும், Title Tease நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்றும் தனது அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.


























