தமிழ்நாடு அரசின் TNPSC – குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்பொழுது வெளியாகும் என்று ட்விட்டரில் கேள்வியெழுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒவ்வொரு வருடமும் தமிழக அரசின் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி இத்தேர்வு நடத்தப்பட்டது. இதனை சுமார் 18.5 லட்சம் பேர் எழுதினர்.
இந்த நிலையில், நடந்துமுடிந்த குரூப் 4-க்கான தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், முடிவுகள் வெளியிடப்படவில்லை. தொடந்து பிப்ரவரி, மார்ச் என்று தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே வந்த நிலையில், கடுப்பான தேர்வர்கள் இணையவழிப் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து ட்விட்டரில் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக்கை தேர்வெழுதியவர்கள் டிரெண்ட் செய்யத் துவங்கினர்.
இதைத்தொடர்ந்து குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை தமிழக அரசு தற்சமயம் அறிவித்துள்ளது. அதன்படி, குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



























