கமலின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் தற்சமயம் ஷங்கர் இயக்கிவரும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து அவர் மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் ’KH234’ படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தன்னுடைய ராஜ்கமல் பிலிம் இண்டர் நேஷனல் தயாரிப்பு நிறுவனம் மூலம் தரமான படங்களையும் அவர் தயாரித்துவருகிறார். விருமாண்டி, ஹே ராம், விஸ்வரூபம், கடாரம் கொண்டான் படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் தயாரித்த ’விக்ரம்’ படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து வசூலை வாரிக்குவித்தது.
இதையடுத்து, தனது ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை கமல் வெளியிட்டுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர் Blood & Battle என்று குறிப்பிட்டு நாளை மாலை 6.30 மணிக்கு அதுகுறித்த முக்கிய அப்டேட் வெளியாகும் என்று வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.


























