பீஸ்ட் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார். ஏர்போர்ட்டில் அவர் இருக்கும் புகைப்படங்கள் ட்விட்டரில் ட்ரெண்டாகியிருக்கிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் பூஜா ஹெக்டே. இவர் ஜீவா நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானார். அந்த படம் தோல்வியடைந்த நிலையில் பூஜாவுக்கு தமிழில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதன்பிறகு இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இன்றைய சூழலில் இந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பூஜா ஹெக்டே இருக்கிறார். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகுக்கு வருகிறார். இந்த அறிவிப்பு முன்னரே வெளியான நிலையில் தற்போது அவர் பீஸ்ட் படப்பிடிப்புக்காக நேற்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் ரீச் ஆன புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படமும், பயணிகள் அவரை எடுத்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக விஜய் ரசிகர்கள் அதனை பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.
























