வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். நல்லான் கால்வாயில் நடைபெற்று வரும் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் மேற்கொண்டு வரும் வெள்ள தடுப்பு பணிகளையும் ஆய்வு செய்துள்ளார்.
























