இந்தியக் குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்ற தென்காசியைச் சேர்ந்த சண்முகவள்ளி என்கிற மாணவியை எம்.பி கனிமொழி அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்தியக் குடிமைப் பணி தேர்வு நடந்து முடிந்த நிலையில், அதற்கான முடிவுகள் வெளியாகின. இந்திய அளவில் இத்தேர்வில் தென்காசியைச் சேர்ந்த மாணவி சண்முகவள்ளி 108-வது இடம் பிடித்து தேர்ச்சி அடைந்துள்ளார். கொரோனா பேரிடர் காரணமாக பயிற்சி வகுப்புகளுக்குக் கூட செல்ல முடியாத சூழலில், இது போன்ற தேர்வில் தேர்ச்சி பெறுவதே சவாலாக இருந்த நிலையில் மாணவி சண்முகவள்ளி 108வது இடம் பிடித்தமையை வாழ்த்தும் விதமாக கனிமொழி அவரது இல்லத்துக்கு சென்றார். சண்முகவள்ளியின் பெற்றோர் முன்னிலையில் பூங்கொத்து வழங்கி சண்முகவள்ளியை வாழ்த்தினார்.
























