டெல்லி மண்டோலி சிறையில் கைதிகளில் 2 பேரை அவர்களுடைய வார்டில் இருந்து வெளியே வர விடாமல் தடுத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதனால் அந்த கைதிகள் இருவரும் அவர்களாகவே சிறிய அளவில் காயங்களை ஏற்படுத்தி கொண்டுள்ளனர்.
அவர்கள் பிற கைதிகளையும் இதேபோன்று, காயங்களை ஏற்படுத்தி கொள்ளும்படி தூண்டியுள்ளனர். கைதிகள் ஒருவருக்கொருவர் காயம் ஏற்படுத்தி கொண்டதால் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சண்டையில் கைதி ஒருவருக்கு பலத்த காயமேற்பட்டு உள்ளது. இதனால், அந்நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். அதன்பின்னர் சிறைக்கு மீண்டும் கொண்டு வந்துள்ளனர்.
























