கடந்த 36 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
டிஜிபி சைலேந்திரபாபு தமிழகம் முழுவதும் ரவுடிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க காவல் உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி Storming ஆப்ரேசன் என்ற பெயரில் நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் கொலை மற்றும் குற்றவழக்கு பதிவேட்டில் உள்ள 16,370 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், ’கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கத்திகள் உட்பட 934 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது’. ரவுடிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை தொடரும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
























