யோகி பாபுவும் ஓவியாவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்துக்கு வடிவேலு கதாப்பாத்திரத்தின் பெயரான காண்ட்ராக்டர் நேசமணி என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் டைட்டில்லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், நகைச்சுவை அம்சம் மிகுந்த படமாக இப்படம் தயாராகவிருக்கிறது. ஃப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் வடிவேலு கான்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் மூலம் தமிழ் மக்களுக்கு அப்பெயர் நன்கு பரிச்சயப்பட்டது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்ட அன்றைக்கு ‘ப்ரே ஃபார் நேசமணி’ ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

இந்த புகழ்வெளிச்சம் காரணமாக இத்திரைப்படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைக்கும் என்பதால் இத்தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்வாதீஷ் இயக்குகிறார். இத்திரைப்படம் முழுவது சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் தயாராகவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தர்மபிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு, சுபாஷ் தண்டபாணி, ஒளிப்பதிவு செய்கிறார். ‘மிருதன்’ பட புகழ் வெங்கட் ரமணன் படத்தை தொகுக்க, ஏ.ஆர்.மோஹன் கலை இயக்கத்தை கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை ‘ராட்சசன்’ படப் புகழ் விக்கி அமைத்திருக்கிறார். ‘சார்பட்டா பரம்பரை’ படப் புகழ் மெட்ராஸ் மீரான் பாடல்களை எழுதியுள்ளார்.
























