தினத்தந்தி குழும உரிமையாளராக இருந்து மறைந்த சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூரில் உள்ள அவரது சிலைக்கு எம்.பி கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தினத்தந்தியின் நிறுவனரான சி.பா.ஆதித்தனாரின் மகனான சிவந்தி ஆதித்தனார் தினத்தந்தியின் உரிமையாளராக இருந்து பத்திரிகையை வளர்த்தவர் என்பதோடு இந்திய ஒலிம்பிக் சங்கத்தலைவராகவும் இருந்தவர். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசு சார்பாக திருச்செந்தூரில் அமைக்கப்பட்டிருக்கும் அவரது சிலைக்கு எம்.பி கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனும் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
























