கல்வி கற்காத 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு அடிப்படைக் கல்வியைக் கற்பிக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விழிப்புணர்வு கலை நிகிழ்ச்சிகள் நடைபெற்றன.
’கற்போம் எழுதுவோம் இயக்கம்’ சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் கல்வி கற்காத 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் 12 பள்ளிகள் மற்றும் 6 பொது இடங்களில் வருகிற 27-ந்தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் விழிப்புணர்வு இயக்க கலை நிகழ்ச்சி தொடக்கவிழா, கிருஷ்ணன்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
எழுத்தறிவு பெறாத பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை மாணவர்கள் கொண்டு செல்வார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக, ‘கற்போம் எழுதுவோம்’ இயக்கத்தினர் கூறியுள்ளனர்.
























