அக்டோபரில் நடக்கவிருக்கும் டி 20 உலகக்கோப்பைப் போட்டிகளுக்காக உலக கிரிகெட் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் அதற்கான ஆந்தமை சர்வதேச கிரிகெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டிருக்கிறது.
அடுத்த மாதம் அக்டோபர் 17ம் தேதியில் டி20 உலகக்கோப்பைப் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. இம்முறை இப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவிருக்கின்றன. இந்நிலையில் டி20 உலகக்கோப்பைப் போட்டிகளுக்கான தீம் பாடலை ஐசிசி வெளியிட்டிருக்கிறது.
அனிமேஷனில் 1.30 நிமிடங்கள் இப்பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்பாடலில் இந்திய கேப்டன் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பொல்லார்ட் போன்ற முக்கிய வீரர்கள் காட்டப்பட்டுள்ளனர். கிரிகெட் விளையாட்டை அனிமேஷனில் கார்ட்டூன் தன்மையோடு படமாக்கியிருக்கிறார்கள்.
மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை இந்தியா நடத்துகிறது என்பதால் இப்பாடல் ஐசிசி, பிசிசிஐ மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆகியவற்றில் வெளியாகியுள்ளது. நாற்பதுக்கும் மேற்பட்டோர் இணைந்து உருவாக்கியிருக்கும் இப்பாடலுக்கு பாலிவுட் திரை இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைத்துள்ளார்.
























