தலைநகர் டெல்லியில் உள்ள அசாதுதீன் ஓவைசி வீட்டை சேதப்படுத்தியதாக இந்து சேனை அமைப்பை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான அசாதுதீன் ஓவைசியின் அலுவலகத்தை ஒட்டிய வீடு டெல்லியில் உள்ள அசோகா சாலையில் உள்ளது. இன்று மாலை ஓவைசியின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, இந்து சேனை அமைப்பை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ள டெல்லி போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு ஹைதராபாத் தொகுதியில் இருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 15வது பாராளுமன்றத்தின் சன்சாத் ரத்னா விருதினையும் பெற்றுள்ளார். ஓவைசி, 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனவர் என்பது குறிப்பிடத் தக்கது.
























