விஜய் டிவியில் வெளியாகும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி இரண்டு சீசன்கள் வெளியாகியுள்ள நிலையில் மூன்றாவது சீசன் எப்போது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சமையல் நிகழ்ச்சிகளிலேயே புதுமையாக கோமாளிகளை இறக்கி அவர்கள் செய்யும் சேட்டைகளோடு ஆன நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இதன் முதல் சீசன் வெளியான சில நாட்களிலேயே இதற்கென பெரும் ரசிகப்பரப்பு உருவானது. இந்நிகழ்ச்சியின் மூலம் பலரும் பெரும் புகழை அடைந்து சினிமா வாய்ப்புகளைப் பெற்றனர். குக் வித் கோமாளியில் கோமாளியாக பங்காற்றிய சிவாங்கி, புகழ் ஆகியோர் தற்போது சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். போட்டியாளராக பங்கேற்ற பவித்ரா நாய் சேகர் படத்தின் நாயகியாக நடித்துள்ளார்.
பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் குக் வித் கோமாளி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
























