வலிமை படப்பிடிப்பை முடித்த பிறகு டெல்லியில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்வதற்காக அஜித் டெல்லியில் தங்கியுள்ளார். அதேநேரம் நெல்சன் திலீப்குமார் இயக்கி, அனிரூத் இசையமைக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்காக நடிகர் விஜய்யும் டெல்லி சென்றுள்ளார். இருவரும் ஒரே நேரத்தில் டெல்லியில் தங்கி இருப்பதால் இருவரும் சந்திக்க வாய்ப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரது ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறை விஜய் அஜித் படங்கள் ரிலீசாகும் போது அவர்களது ரசிகர்கள் மாறி மாறி திட்டிக் கொள்வது வழக்கமாக நடைபெறும். விஜய்யும் அஜித்தும், ‘எங்களுக்குள் எந்த முரண்பாடும் இல்லை. நாங்கள் எப்போதும் நல்ல நட்புடன் இருக்கிறோம்’ என இருவரும் சொன்னாலும் அவர்கள் ரசிகர்களிடையே எப்போதும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டே தான் இருக்கும். இந்நிலையில் இருவரும் டெல்லியில் இருப்பதால், அவர்கள் இருவரும் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறி இருக்கிறது.
























