நாம் தமிழர் கட்சி தலைமை இன்று காலை வெளியீட்டுள்ள அறிக்கையில்,
“தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் பொது சின்னமாக ‘விவசாயி’ சின்னத்தை உறுதிசெய்துள்ளது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்”.

உழவு இல்லையேல்; உணவு இல்லை!
உணவு இல்லையேல்; உயிர்கள் இல்லை!
உயிர்கள் இல்லையேல்; உலகு இல்லை!
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
























