மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பேர் வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லி வாசம்’ என்கிற பாடலுக்கு திருக்குறள்தான் இன்ஸ்பிரேஷனாக இருந்தது என இளையராஜா கூறியுள்ளார்.
சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா திரைப்படத்தில் ‘பேர் வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லி வாசம்’ பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு பெரும் ஹிட் அடித்திருக்கிறது. இந்நிலையில் நேற்று இளையராஜாவின் கோடம்பாக்கம் ஸ்டுடியோவுக்கு கமல்ஹாசன் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது ‘பேர் வெச்சாலும் வெக்காம’ பாடல் அனுபவத்தை இளையராஜா பகிர்ந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்
“மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தின் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ், கமல்ஹாசன் முன்னிலையில் அப்பாடலுக்கான ரெக்கார்டிங் நடந்தது. வாலி அண்ணனிடம் நான் ட்யூனை சொன்ன போது அவர் ‘இந்த ட்யூனுக்கெல்லாம் எப்படிய்யா எழுதுறது” என்று கேட்டார். அதற்கு நான் அதான் ஏற்கனவே வள்ளுவர் எழுதியிருக்காரே ‘துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி’ என்கிற குறளைச் சொல்லி அந்த சந்தம்தான் இது என்று சொன்னேன். அதன்பிறகு அவர் ‘பேர் வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லி வாசம்’ என்கிற வரிகளை எழுதினார்” என்பதை பகிர்ந்து கொண்டார்.
























