இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். அவரது பிறந்த நாளையொட்டி வலிமை படக்குழு சார்பாக வாழ்த்து தெரிவித்த புகைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் பகிர்ந்திருக்கிறார்.
அஜித் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கும் திரைப்படமான வலிமை திரைப்படத்தில் அஜித்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி பெரு வெற்றி பெற்றது. தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ‘அண்ணாத்த’ படம் வெளியாவதால் வலிமை பட வெளியீடு தள்ளிப்போகும் என சொல்லப்படுகிறது.

இப்படத்தின் சண்டைக்காட்சிகள் சமீபத்தில் ரஷ்யாவில் படமாக்கப்பட்டன. இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாகல் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். அவர் தெலுங்கில் ஆர்.எக்ஸ் 100, கேங் லீடர் உள்ளிட்ட நிறைய படங்களில் நடித்துள்ளார். இன்று தனது 29 வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அதனை வாழ்த்தி ‘வலிமை’ படக்குழு சார்பாக தயாரிப்பாளர் போனி கபூர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அஜித் ரசிகர்கள் பலரும் அதனைப் பகிர்ந்து வருகிறார்கள்.
























