நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய ஃபோட்டோ ஷூட் ஒன்று இன்று வெளியானது. தேவதையின் எழிலோடு அவர் இருக்கும் அப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. மேலும், த்ரிஷா, சமந்தா, கல்யாணி ப்ரியதர்ஷன் உடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து எடுத்த செல்ஃபியும் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது. இவ்விரு காரணங்களாலும் ட்விட்டரில் இன்று தமிழ்நாடு ட்ரெண்டிங்கில் கீர்த்தி சுரேஷ் ஹாஷ்டேக் முதலிடம் வகித்தது.





























