கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு நிறைவு பெற்று விட்டது. இது பற்றிய அறிவிப்பை சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
சிம்பு – கௌதம் மேனன் கூட்டணிக்கென பெரிய ரசிகப்பரப்பு இருக்கிறது. இவர்கள் இருவரும் இணைந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு இருவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இணைந்தனர். ஆனால் படம் தோல்வியடைந்து விட்டது. இதற்கு அடுத்து மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மூலம் இவர்கள் இணைகிறார்கள்.
இப்படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்தில் தோன்றுகிறார். இயக்கத்திலிருந்து நடிகராகவும் மாறிவிட்ட கௌதம் மேனன், தற்போது இயக்கி வரும் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது. எப்படியும் 2022ம் ஆண்டு தொடக்கத்தில் இத்திரைப்படம் வெளியாகும் என்கிற நம்பிக்கையில் இருக்கும் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது.
























